முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மல்வத்து விகாரைக்குச் சென்று மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை இன்று (20) சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து மல்வத்து பீடத்தின் அநுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
பின்னர், அஸ்கிரி விகாரைக்குச் சென்ற இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், மகா விகாரவம்சிக சியாமோபாலி மகா பீட அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
சிங்கள மொழியில் அண்மையில் அவர் எழுதி வெளியிட்ட புத்தகங்களையும் இதன் போது வழங்கி மகா நாயக்க தேரர்களுக்கு வழங்கி வைத்தார்.



