புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியினர் பூண்டுலோயாவில் நடத்த இருந்த சர்வதேச சகோதரிகள் தினம் தற்போது அங்கு நிலவும் மழை, வெள்ளம் காரணமாக இடம் மாற்றப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு வவுனியா மாநகர சபையின் கலாசார மண்டபத்தில் 09.08.2026 காலை 10 மணிக்கு மகளிர் அணியின் தலைவி சிவகெளரி தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பாடசாலை நூலகங்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு செய்தல் மற்றும் காப்பகங்களில் வாழும் பெண் சிறாரர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்குதல் மற்றும் கவியரங்கம், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
