(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பகுதியில் “டித்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பினால் விசேட சமூக நலத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், சூறாவளி காரணமாக வீடுகளை இழந்த இரண்டு குடும்பங்களின் வீடுகளை மீளக் கட்டியெழுப்புவதற்காக பொருட் உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், பொருளாதார சிரமங்களுடன் வாழும் 110 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட 60 பாடசாலை மாணவர்களுக்கு அவர்களின் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க தேவையான பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இந்த மனிதாபிமானப் பணியை வெற்றிகரமாக முன்னெடுக்க பெறுமதியான ஒத்துழைப்பை வழங்கிய PDA நிறுவனத்திற்கு எங்களது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வத்கவும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும் வலிமையையும் உருவாக்கியுள்ளது என பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் என்டனி யேசுதாஸன் தெரிவித்தார்.






