எம்.யூ.எம்.சனூன்
முன்னைய அரசாங்கத்தினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.எம். முர்ஷித் வேண்டியதற்கிணங்க புத்தளம் அம்பர் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு ரூபா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கதிரைகள் மற்றும் மின்விசிறிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு சங்கத்தின் தலைவர் முஹம்மது பரூஸ் தலைமையில் அண்மையில் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருட்களை புத்தளம் மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.எம்.முர்ஷித், சங்கத் தலைவர், மற்றும் செயலாளர், உறுப்பினர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் பஸால் மெளலவி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட இளைஞர் அமைப்பாளர் அஸீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



