என்றுமில்லாதவாறு கடந்த சில மாதங்களாக முகநூலில் இனவாதக் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றது. இது தொடர்வது ஆரோக்கியமல்ல, இதனைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு இரு சமூகத்தவர்களுக்கும் உள்ளது.
இதன் பின்னணி பற்றிய சந்தேகங்கள் ஏற்பட்டதுண்டா ?
2023 இல் ஆரம்பிக்கப்பட்ட காசா போரின்போது இஸ்ரேலினால் நடத்தப்பட்ட இனப்படுகொலை காரணமாக சர்வதேச ரீதியில் தனது செல்வாக்கை இஸ்ரேல் இழந்துள்ளது.
இழந்த செல்வாக்கை மீண்டும் அதிகரிக்கும் நோக்கில், வருடாந்தம் பல பில்லியன் டொலர்களை ஒதுக்கி, தனக்கு எதிரான பிரச்சாரத்தை முறியடித்து, ஆதரவு பிரச்சாரத்துக்காக சமூக வலைத்தள பணியாளர்களை உலகம் முழுவதும் இஸ்ரேல் நிறுவியுள்ளது என்ற தகவல் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்தது.
அந்தவகையில் இந்தியாவில் அணைத்து மாநிலங்களிலும் ஏராளமானவர்களை நியமித்துள்ளதுடன், மாதாந்தம் ஒருவருக்கு 300 – 600 அமெரிக்க டொலர்கள் சம்பளம் வழங்கப்படுகின்றது என்ற செய்தி ரகசியமல்ல. இதனாலேயே குழந்தைகளை கொலை செய்கின்ற இஸ்ரேலை இந்திய சங்கிகள் நியாயப்படுத்துகின்றனர்.
இதற்கு எனது முகநூல் சாட்சியாகும். இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டால், இந்திய சங்கிகள் ஓடிவந்து தூசன வார்த்தைகளினால் திட்டித் தீர்க்கிறார்கள். இவைகள் பெரும்பாலும் போலி முகநூல் கணக்குகள்.
அதுபோல் இன்னும் சிலர், இனவாதக் கருத்துக்களுக்கு அதிகமாக ரீச் கிடைக்கின்றது என்ற காரணத்தினால், முகநூல் மூலமாக பணம் சம்பாதிப்பதற்காகவும் இனவாதக் கருத்துக்களை பதிவிடுகின்றனர்.
இந்திய சங்கிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளது.
இவ்வாறான இனவாதக் கருத்துக்களுக்கு பின்னால் உள்ள சூழ்சிகள் பற்றி ஆராயத் தெரியாத சில அப்பாவிகளும், ஏற்கனவே இனவாத சிந்தனையில் உள்ளவர்களும் போலி முகநூல்களின் பிரசாரத்துக்கு இசைவாக அவர்களது சொந்த கணக்குகளில் பதிவிடுகின்றனர்.
எனவே, தூரநோக்கில் இது ஆபத்தானது. சிலர் பணம் சம்பாதிப்பதற்காக இரண்டு சிறுபான்மை இனங்களும் முட்டி மோதுவதனை தவிர்ப்பதற்கு அரசியல் தலைவர்களும், ஏனைய நிறுவனங்களும், மத அமைப்புக்களும் முன்வர வேண்டும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
