எம்.யூ.எம்.சனூன்
"தித்வா" புயல் சீற்றத்தினால் முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கனமூலை வடக்கு மற்றும் கடையாமோட்டை கிராம அலுவலர் பிரிவுகளில் வீடுகளை முழுமையாக இழந்த குடும்பங்களுக்காக, தலா 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 07 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் புதன்கிழமை (11) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், முந்தல் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் கயான் ஜானக சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வு கனமூலை வடக்கு பிரஜா சக்தி தலைவரும், முந்தல் பிரதேச செயலக கிளீன்ஸ்ரீ லங்கா திட்ட ஒருங்கிணைப்பாளருமான இர்சால் கபூர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அரசாங்க அதிகாரிகளும், சமூகப் பெரியார்களும் கலந்துகொண்டனர்.
முந்தல் பிரதேச செயலாளர், பிரதி திட்டப் பணிப்பாளர், கனமூலை தெற்கு பிரஜா சக்தி தலைவர் ரமீஸ் பாரூக், கடையாமோட்டை தலைவர் சுகூர், கனமூலை பெரிய பள்ளி மற்றும் மஹல்லா நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் பாதுகாப்பான இருப்பிடங்களை அமைத்துக் கொடுக்கும் நோக்கில், இலங்கை அரசாங்கத்தினால் இத்திட்டம் மிக விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















