JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜிஹாத் முஸ்லிம் ஊர்காவல் படையினர் தமிழர்களை கொலை செய்தார்களா?

முஸ்லிம் சமூகம் அவர்களது தனித்துவ இன அடையாளமான “முஸ்லிம்கள்” என்று அழைப்பதனை "இனவாதம்" என்றும், “தமிழ் பேசும் மக்கள்” என்றுதான் அழைக்க வேண்டுமென்ரெல்லாம் சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிடுகின்றனர். 

ஆனால் முஸ்லிம்கள் ஓர் தனியான இனம் என்பதனை தமிழ் தலைமைகள் ஏற்கனவே அங்கீகரித்துள்ளதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தும் விதமாக விடுதலைப் புலிகளின் அங்கீகாரத்தினை கடந்த மூன்றாவது பதிவிலும், தமிழர் விடுதலை கூட்டணியின் அங்கீகாரத்தினை இங்கே நான்காவது தொடரில் பதிவிடுகிறேன்.   

தமிழர் விடுதலைக் கூட்டணி - முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி உடன்பாடும், கூட்டறிக்கையும். 

.....................................................................

தமிழர் விடுதலைக் கூட்டணி முஸ்லிம்களின் பிரத்தியேகமான தனித்துவத்தை அங்கீகரிக்கின்றது. முஸ்லிம்கள். நாடு முழுவதிலும் சிறுபான்மையினராகவே உள்ளனர்.  இதை உணர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணி பின்வருவனவற்றை விதைந்துரைக்கின்றன.

1. காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, தம்பலகாமம் (முள்ளிப் பொத்தான) எருக்கலம்பிட்டி, முசலி ஆகிய ஒவ்வோர் இடங்களிலும் முஸ்லிம்களைப் பெருமான்மையாகக் கொண்ட உப அரசாங்க அதிபர் பிரதேச சபைகளை - பிரிவுகளை ஏற்படுத்துதல், ஒவ்வோர் பிரிவிலும் எந்தெந்த பிரதேசங்கள் என்பனவற்றின் அடிப்படையில் பாரம்பரிய வாழ்விடங்கள், நிலம், மூலவளங்கள் என்பனவற்றின் அடிப்படையில் கலந்துரையாடல்கள் நடத்தி முடிவு செய்யப்படும்.

2. கல்முனையில் ஒரு மாநகரசபை ஏற்படுத்தப்படுவதுடன் சம்மாந்துறை, காத்தான்குடி, கிண்ணியா ஆகிய இடங்களில் நகரசபைகளை நிறுவுதல்.  

3. தமிழர் விடுதலைக் கூட்டணி முஸ்லிம்களினுடைய பிரதிநிதித்துவத்தை உத்தரவாதப் படுத்துவதற்காக, மாகாண சபைக்கான அங்கத்தவர்களின் தெரிவு ஆல்புல ரீதியான தேர்தல் தொகுதிகள் அமைதல் வேண்டும். வடக்க கிழக்கு மாகாண சபை 71 அங்கத்தவர்களைக் கொண்டதாக அமையும், அதாவது வட மாகாணத்துக்கு 36 அங்கத்தவர்களும் கிழக்கு மாகாணத்துக்கு 35 அங்கத்தவர்களும் இருப்பர்.

முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் 32.27% மற்றும் வடக்கு மாகாணத்தில் 4.74% உள்ளனர். த.வி.கூட்டணி, முஸ்லிம் தூதுக் குழுவினருடன் விரிவாக விவாதித்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் 12க்கு குறைவில்லாத முஸ்லிம் அங்கத்தவர்களும், வட மாகாணத்தில் 5க்கு குறைவில்லாத முஸ்லிம் அங்கத்தவர்களும் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையிலான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறது.

4. வடக்கு - கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் முறையாக நியமிக்கப்பட்டிருந்தாலன்றி, குறித்த மாகாண சபையின் பிரதி முதலமைச்சராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.  முஸ்லிம் விவகாரங்களுக்கான ஒரு அமைச்சர் உட்பட அமைச்சர்கள் சபையில் 25 வீதத்துக்கு குறைவில்லாத அமைச்சர்கள் முஸ்லிம்களாக இருப்பதற்காக வகைசெய்யும் விதத்தில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

5. வருங்கால அரச காணிப் பங்கீடுகளில் முஸ்லிம்களுக்கு உரித்துடைய காணிப்பங்கு விகிதம் கிழக்கு மாகாணத்தில் 35% குறைவில்லாமலும், மன்னார் மாவட்டத்தில் 30% குறைவில்லாமலும், வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளில் 10% குறைவில்லாமலும் இருத்தல் வேண்டும்.

6. வடக்கு கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழும் முஸ்லிம்களின் விகிதாசாரத்தின்படி பொதுத்துறை வேலை வாய்ப்புகளுக்கான உரிமைகளை முஸ்லிம்கள் கொண்டிருப்பவர்கள்.

7. பல்கலைக்கழகமட்டம் வரையிலான பிரத்தியேக கல்வி வசதிகள் முஸ்லிம்களுக்காக ஏற்படுத்தப்படும். பல்கலைக்கழகங்களின் அனுமதியின்போது கல்வியில் பின்தங்கியிருக்கும் குழுக்கள், பிரதேசங்கள், பாடசாலைகள் என்பனவற்றிற்கு விசேட கவனிப்பு செலுத்தப்படும்.

8. முஸ்லிம்களது உரிமைகளைப் பாதிக்கக்கூடிய எதுவித சட்டவாக்கங்களும் அவற்றிக்கு முஸ்லிம் பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர் சார்பாக வாக்களித்தாலன்றி, வடக்கு கிழக்கு மாகாண சபையினால் நிறைவேற்றப்படலாகாது.

9. முஸ்லிம்களால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜரில் உட்படுத்தப்பட்டிருந்த ஏனைய விடயங்கள் தொடர்பில் எமது கருத்துக்களை நாம் தெரிவித்துள்ளோம்.  இவ்விடயங்கள் இரு பகுதியினராலும் மேலும் பரிசீலிக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன.

இந்த கூட்டறிக்கையானது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அ. அமிர்தலிங்கமும், அதன் தலைவர் எம். சிவசிதம்பரமும் 03.10.1987 திகதி ஒப்பமிட்டு வெளியிட்டனர்.    

தொடரும்....................

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال