JobVibe.lk - Sri Lanka Job Portal

ஒரு கோடி நிதி ஒதுக்கீட்டில் கட்டட புனர் நிர்மாண பணிகள் ஆரம்பம்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் நீண்ட கால வள குறைப்பாட்டிற்கு தீர்வாக பாடசாலையின் பிரதான மண்டபத்தின் புனர் நிர்மாணத்திற்காக இவ்வருடம் சுமார் ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

புத்தளம் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி தில்லையடி வட்டார உறுப்பினர் சஹ்ரான் தாஜுதீனின் கடந்த வருடம் முதலான தொடராக மேற்கொள்ளப்பட்ட முயற்சியினூடாக இவ்வருட திட்டமிடலில் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதான மண்டபத்தின் இந்த திருத்தப்பணிகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை பார்வையிடுவதற்கான கள விஜயமொன்று செவ்வாய்க்கிழமை (25) மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது மாநகர சபை உறுப்பினர் சஹ்ரான் தாஜுதீனின் அழைப்பின் பேரில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமாகிய எம்.ஜே.எம்.பைசல் கலந்து கொண்டார்.

மாநகர சபை உறுப்பினர் சஹ்ரான் தாஜுதீனால் தொடர்ந்தும் பாடசாலைக்கான பௌதீக வளங்களை பெற்றுக்கொள்வதற்கான முஸ்தீபுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال