JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - விருதோடையைச் சேர்ந்த சஹீதா உம்மா அவர்கள் காலமானார்

விருதோடையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சஹீதா உம்மா அவர்கள் இன்று (06) வியாழக்கிழமை காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார் காலம் சென்றவர்களான சரீப்தீன், ஹாஜரா உம்மா ஆகியோரின் அன்பு மகளும், காலம் சென்ற அஸன் குத்தூஸ் (JP) அவர்களின் அன்பு மனைவியும், ஜனூபா பீவி, காலம் சென்ற ஜெஸீமா, ரிபாய்தீன், மக்கள் வங்கி ஊழியர் ஜிப்ரி, நிலூபா, ரியாஸ் ஆகியோரின் அன்புத் தாயும், காலம் சென்ற ஹமீட் ஹுஸைன், ஹுசைனா, மௌபியா, சேகு மொஹிதீன், சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலம் சென்றவர்களான சாஹுல் ஹமீட், பாரூக் மாஸ்டர், ஜலீல், தாஹிரா பேஹம், மிஸ்ரியா உம்மா, மற்றும் செய்னுல் அரபா பஸீர் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று இஷாத் தொழுகையுடன் விருதோடை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِوَعَذَابِ النَّـار




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال