(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
மீனவ சமூகத்தினருக்காக இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அடிப்படை முதலுதவி நிகழ்ச்சி, செவ்வாய்க்கிழமை (2026 ஆகஸ்ட் 18) ஹம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகத்தை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடைபெற்றது.
அதன்படி, சமூகத்தின் சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ், ஹம்பாந்தோட்டா மீன்பிடித் துறைமுகத்தின் மீனவ சமூகத்தினருக்கு, கடல் சூழலில் ஏற்படக்கூடிய காயங்கள், இரத்தப்போக்கு, தீக்காயங்கள், மயக்கம் மற்றும் பிற சுகாதார அவசரநிலைகளுக்கான முதலுதவி உட்பட, நல்ல சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் அத்தகைய அவசரநிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்துக் கல்வி கற்பிப்பதற்காக, தெற்கு கடற்படை கட்டளையகத்தின் மூலம் கடற்படை இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.




