JobVibe.lk - Sri Lanka Job Portal

மங்கள எளிய கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட வரிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடொன்றை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பம்.

எம்.யூ.எம்.சனூன் 

முந்தல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மங்கள எளிய கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட  வரிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடொன்றை அரசாங்க நிதியுதவியுடன் அமைப்பதற்கான பணிகள் (24) திங்கட்கிழமை, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசலினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடுகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 

தெரிவு செய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு புதிய வீடுகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களின் வீடமைப்பு கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிகழ்வில் முந்தல் உதவி பிரதேச செயலாளர், பிரஜா சக்தி தலைவரும், தேசிய மக்கள் சக்தி புத்தளம் பிரதேச சபையின் உறுப்பினருமான விமல் ,  வீட்டு பயனாளிகளும், வீட்டுதிட்ட உத்தியோகத்தரும்  கலந்துகொண்டார்கள்.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال