JobVibe.lk - Sri Lanka Job Portal

நுரைச்சோலையில் பெண்களுக்காக புதிய மஸ்ஜித் திறப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

நுரைச்சோலை ஜாமிஉல் ஹசனாத் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் பெண்களின் தொழுகைத் தேவையை கருத்திற்கொண்டு ஐ.எஸ்.ஆர்.சீ நிறுவனததினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான மஸ்ஜித்  ஐ.எஸ்.ஆர்.சீ நுரைச்சோலை கிளைத் தலைவர் ஏ.சீ.எம் மர்சூகினால் திறந்து வைக்கப்பட்டது.

நுரைச்சோலை பிரதான வீதியோரத்தில் அமைந்துள்ள இந்த மஸ்ஜித், பிரதேச மக்களுக்கு மட்டுமன்றி, நுரைச்சோலை ஊடாகப் பயணிக்கும் பெண்கள் மற்றும் குடும்பத்தினரும் தொழுகை நேரங்களில் தங்களது தொழுகையை இலகுவாக நிறைவேற்றுவதற்கான சிறந்த வசதியாக அமையும்.

பயணத்தின் போது தொழுகை நேரம் ஏற்படும் பெண்களின் தேவையை கருத்திற்கொண்டு, பாதுகாப்பானதும் வசதியானதுமான தொழுகை இடத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மஸ்ஜித் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஜாமிஉல் ஹசனாத் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் பாஜில் ஹாஜி, பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் ஐ.எஸ்.ஆர்.சீ,( ISRC) நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال