JobVibe.lk - Sri Lanka Job Portal

கடற்படையினரின் விசேட தேடுதலில் பெருந்தொகையான உலர்ந்த இஞ்சி மன்னாரில் கைப்பற்றப்பட்டது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

மன்னார் நறுவிலிக்குளம் மற்றும் வங்காலை ஆகிய கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கி திங்கட்கிழமை (2026 ஆகஸ்ட் 24) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான உலர்ந்த இஞ்சியைக் இலங்கை கடற்படையினர்  கைப்பற்றினர்.

இதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை புஸ்ஸதேவ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், நறுவிலிக்குளம் மற்றும் வங்காலை ஆகிய கடற்கரைப் பகுதிகளில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) உரைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

இதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்று, கடற்படையினரின் நடவடிக்கைகளின் காரணமாகக் கடத்தல்காரர்களால் அக்கடற்கரைப் பகுதிகளில் கைவிடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 240 கிலோகிராமிற்கும் அதிகமான உலர்ந்த இஞ்சியைக் கடற்படையினர் கைப்பற்றியதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவற்றைக் முருங்கன் மற்றும் வங்காலை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال