JobVibe.lk - Sri Lanka Job Portal

சட்டவிரோதமான கடல் அட்டைகளை கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவர் கிளிநொச்சி கிரஞ்சி பகுதியில் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கிளிநொச்சி, கிரஞ்சி கடற்கரைப் பகுதியில் திங்கட்கிழமை (2026 ஆகஸ்ட் 24) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் மற்றும்  தெப்பப் படகொன்று (01) மற்றும் சுமார் முந்நூற்று எண்பது (380) கடல் அட்டைகள் ஆகியவை இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட 'இலங்கை கடற்படை கப்பல் புவனேக' நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கிராஞ்சி கடற்கரைப் பகுதிக்கு வந்து கொண்டிருந்த தெப்பப் படகு ஒன்றைச் சோதனையிட்டதில், அனுமதியின்றி தரைப்பகுதிக்குக் கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற கிரஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال