(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
அங்குலாண கடற்பகுதியில் கடற்படையின் அதிவேக தாக்குதல் படகொன்று சனிக்கிழமை (15) விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, காணாமற்போன கடற்படை அதிகாரியைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மீட்கப்பட்ட பதினொரு (11) கடற்படை வீரர்கள் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் சுகாதார நிலைமை பாரதூரமானது அல்ல.
இதற்கிடையில், விபத்துக்குள்ளான கடற்படைப் படகை மீட்கும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (2026 ஆகஸ்ட் 16) ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக கடற்படையின் சுழியோடிகள் (Divers) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது நிலவும் சீற்றமான கடல் நிலைமை இந்நடவடிக்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிறப்பு விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.





