JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் அதிமேதகு H.E. Wiebe Jakob DE BOER உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக வெள்ளிக்கிழமை (2026 ஆகஸ்ட் 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவைச் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் 27வது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவிற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்துச் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال