JobVibe.lk - Sri Lanka Job Portal

பல்துறைக் கலைஞர் Dr.தாஸீம் அஹமதின் மறைவு பேரிழப்பாகும்; மருதம் கலைக்கூடல் மன்றம் அழ்ந்த அனுதாபம்.!

மருத்துவம், சமூக சேவை, கலை, இலக்கியத் துறைகளுக்கு நீண்ட காலமாக பெரும்பங்காற்றிய பல்துறைக் கலைஞர்  Dr.தாஸீம் அஹமதின் மறைவு எமது சமூகத்திற்கு மாத்திரமல்லாமல் முழு நாட்டுக்கும் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும் மருதம் கலைக்கூடல் மன்றம் அழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளது.

புகழ்பெற்ற மருத்துவரும் எழுத்தாளரும் இலக்கியப் படைப்பாளருமான டொக்டர் தாஸீம் அஹமட் இன்று கொழும்பில் காலமானார்.

இவரது மறைவுக்கு மருதம் கலைக்கூடல் மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் அஸ்வான் ஷக்காப் மௌலானா வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தலைநகர் கொழும்பில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மருத்துவராகப் பணியாற்றி மக்கள் சேவை ஆற்றியுள்ள இவர் - கலை, இலக்கியத் துறைகளிலும் சமூக சேவைகளிலும் அர்ப்பணிப்புடன் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இவர் உள்நாட்டில் மாத்திரமல்லாமல் இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளிலும் சர்வதேச அளவிலான இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்று, இலக்கியப் பணிகளுக்கு அளப்பரிய பங்களிப்புகளைச் செய்துள்ளார்- என்று மருதம் கலைக்கூடல் மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் அஸ்வான் ஷக்காப் மௌலானா மேலும் தெரிவித்துள்ளார்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال