JobVibe.lk - Sri Lanka Job Portal

UNCCD COP17 MAYOR’S FORUM – ULAANBAATAR 2026 நிகழ்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இரு மேயர்கள் பங்கேற்பு.

எம்.யூ.எம்.சனூன்

UNCCD COP17 MAYOR’S FORUM – ULAANBAATAR 2026 நிகழ்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்பதற்காக, புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர முதல்வர் அரோஷா அத்தபத்து ஆகியோர் நேற்று மொங்கோலியாவின் உலான்பாத்தர் நகரை வியாழனன்று (20) சென்றடைந்தனர்.

உலான்பாத்தர் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த அவர்களுக்கு, உலான்பாத்தர் நகர பிரதி மேயர் Jargalsaikhan Ganbaatar அவர்களினால் VIP Lounge இல் உத்தியோகபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த சர்வதேச மாநகர முதல்வர்களுக்காக, மொங்கோலிய தலைநகரின் ஆளுநரும் உலான்பாத்தர் மாநகர முதல்வருமான B. Purevdagva அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட வரவேற்பு நிகழ்விலும் இலங்கை மாநகர முதல்வர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.

மாநகர முதல்வர்களுக்கான Mayor’s Forum மாநாடு வெள்ளியன்று (21) ஆரம்பமானது.

உலகின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றுகூடும் இச்சர்வதேச மாநாட்டில், புத்தளம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை மாநகர முதல்வர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال