JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கை கடற்படை திருகோணமலையில் சமூக சுகாதாரத் திட்டத்தை நடத்தியது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையின் கிழக்கு கடற்படைக் கட்டளையினால், ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘ஆரோக்கியா’ தேசிய நலன்புரி திட்டத்திற்கு அமைவாக வியாழக்கிழமை,( 2026 ஆகஸ்ட் 20) திருகோணமலையில் சமூக சுகாதார மேம்பாட்டுத் திட்டமொன்று நடத்தப்பட்டது. 

திருகோணமலையிலுள்ள இலங்கை துறைமுக அதிகாரசபை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இத்திட்டத்தின் நோக்கமானது, சுகாதார மேம்பாடு குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இலங்கையில் பரவலாகப் பதிவாகும் தொற்றும் நோய்களைத் தடுப்பது குறித்த மக்களின் புரிதலை மேம்படுத்துவதும் ஆகும். 

மேலும், இத்திட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு, கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட மருத்துவப் பணியாளர்களால் தொற்றா நோய்களைக் கண்டறிவதற்கான ஆரம்ப சுகாதாரப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. 

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் முக்கிய பங்காளராக, பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இதுபோன்ற திட்டங்களுக்கு இலங்கை கடற்படை தொடர்ந்து தனது ஆதரவை வழங்கி வருகிறது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال