JobVibe.lk - Sri Lanka Job Portal

உடப்பு மற்றும் ஆன்டிமுணை பிரதான வீதியில் அமைந்திருக்கும் பிரதான பாலத்தை பாதுகாக்கும் நிர்மாண அபிவிருத்திக்காக ரூபா 83 மில்லியன் செலவில் வேலைத்திட்டம் ஆரம்பம்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் மாவட்டத்தில் உடப்பு மற்றும் ஆன்டிமுணையை இணைக்கும் பிரதான பாலத்தை பாதுகாக்கும் நிர்மாண நடவடிக்கைகள் ரூபா 83 மில்லியன் செலவிலான வேலைத்திட்டம் அடிக்கல் (31) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

"வளமான நாடு, அழகான வாழ்கை" திட்டத்தின் கீழ் நடக்கும் இந்த முக்கிய வீதி அபிவிருத்தி பணி,  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டமானது தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைப்பாளருமான கயான் ஜானக மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம்.பைசல் ஆகியோரின் ஆலோசனையுடனும், ஆராச்சிகட்டுவ பிரதேச சபை தலைவர் ஜயரத்ன  ஆகியோரின் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதான பொறியிலாளர்கள், பிரஜா சக்தி தலைவர்கள், உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஊர் மக்களும் கலந்து சிறப்பித்தனர்.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال