எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மாவட்டம் கல்பிட்டி வீதியில் ஏத்தாளை தலவில பகுதியில் கால்வாய் அமைப்பதற்காக ரூபா 136 மில்லியன் செலவிலான வேலைத்திட்டத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வு (31) திங்கட்கிழமை இடம்பெற்றது.
"வளமான நாடு, அழகான வாழ்கை" திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த முக்கிய வீதி அபிவிருத்தி பணி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டமானது தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைப்பாளருமான கயான் ஜானக மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம். பைசல் ஆகியோரின் ஆலோசனையுடனும், கல்பிட்டி பிரதேச சபை தலைவர் ஏ.எஸ்.எம்.ரிகாஸ் மற்றும் பிரதி தலைவர் சமன் குமார ஆகியோரின் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதான பொறியளாலர்கள், பிரஜா சக்தி தலைவர்கள், உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஊர் மக்களும் கலந்து சிறப்பித்தனர்.





