JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு புதிய Smart Board அன்பளிப்பு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளை நவீன மயப்படுத்தும் நோக்கில், மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் வசதிகளை மேம்படுத்துவதற்காக புதிய Smart Board ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த Smart Board இனை வட்டவல Plantations PLC நிறுவனத்தின் தலைவர் மற்றும் பைரஹா பாம்ஸ் PLC நிறுவனத்தின் தலைவர் எம். ரியாஸ் மிஹ்லார் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

கல்லூரியின் அதிபர் ஐ.ஏ. நஜீமின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த Smart Board வழங்கப்பட்டுள்ளது.

இந்த Smart Board இனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (31) புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்றது. 

இதன்போது எம். ரியாஸ் மிஹ்லாரின் பிரதி நிதியாக முஸ்லிம் செரிட்டி செரண்டிப் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் முஜாஹித் நிஸார் Smart Board இனை கல்லூரி நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

புதிய Smart Board மூலம் வகுப்பறைக் கற்பித்தல் நடவடிக்கைகள் மேலும் பயனுள்ளதாகவும், மாணவர்களுக்கு தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கற்றல் அனுபவத்தை வழங்கக்கூடியதாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதுடன், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இந்த வசதி உதவியாக அமையும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மாவட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் பெறுமதி மிக்க Smart Board-ஐ அன்பளிப்பாக வழங்கிய எம். ரியாஸ் மிஹ்லார் அவர்களுக்கு புத்தளம் ஸாஹிரா கல்லூரி நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தையும் கல்வி வளர்ச்சியையும் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்படும் இவ்வாறான சமூகப் பங்களிப்புகள், பாடசாலைகளில் நவீன கல்வி வசதிகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال