(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையினரும், புத்தளம் பொலிஸ் துறை சிறப்பு அதிரடிப்படையினரும் இணைந்து புத்தளம் முள்ளிபுரம் பகுதியில் மேற்கொண்ட சிறப்புக் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம், வெளிநாட்டு சிகரெட் தொகையைச் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த நபரொருவர் ஞாயிற்றுக்கிழமை (2026 ஆகஸ்ட் 09) திகதி சட்டத்தின் முன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் தம்பபண்ணி நிறுவனத்திற்குக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனமும், புத்தளம் காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினரும் இணைந்து, புத்தளம் முள்ளிபுரம் பகுதியில் மேற்கொண்ட இந்த சிறப்புக் தேடுதல் நடவடிக்கையின்போதுசந்தேகத்திற்குரிய வீடு ஒன்று (01) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அங்கு, சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏழாயிரம் (7,000) வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் (01) இவ்வாறு சட்டத்தின் முன் கைது செய்யப்பட்டார்.
மேலும், இந்தக் கூட்டு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 49 வயதுடைய நுரைச்சோலைப் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்தச் சந்தேக நபரும் வெளிநாட்டு சிகரெட் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

