(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றிலிருந்து 17 வெற்று கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் சனிக்கிழமை (01) அறிவித்திருந்தது.
நிலவும் நீரோட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, இந்த வெற்று கொள்கலன்கள் பேருவளையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடற்கரைப் பகுதிகளை நோக்கி மிதந்து வருவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த கொள்கலன்களில் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (02) காலி இந்துருவ, கைகாவல பகுதி கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.


