JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை இரு மாணவர்கள் தேசிய மட்டத்தில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் பெற்று சாதனை...!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை இருமாணவர்கள்  சிதம்பரம் கணிதப் போட்டியில் பங்குபற்றி தேசிய மட்டத்தில்  தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்து பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளாதாக பாடசாலையின் அதிபர் எம். வை.ஹுதைபா தெரிவித்தார்.

இதன்படி  சிதம்பரம் ஒலிம்பியாட் தேசிய மட்ட கணிதப் போட்டியில் எம்.ஐ உமைர் தங்கப் பதக்கத்தையும், எம்.ஐ உமர் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال