JobVibe.lk - Sri Lanka Job Portal

நெடுந்தீவிற்குத் தெற்கே விபத்துக்குள்ளான இந்திய மீன்பிடிப் படகில் இருந்து 11 மீனவர்களை இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

நெடுந்தீவிற்குத் தெற்கே கடற்பகுதியில் பாறையில் மோதி வியாழக்கிழமை (2026 ஆகஸ்ட் 06) அதிகாலை விபத்துக்குள்ளான இந்திய மீன்பிடிப் படகில் இருந்த பதினொரு (11)  மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தமது படகுகளை அனுப்பி மேற்கொண்ட உடனடி மீட்புப் பணியின் மூலம் பாதுகாப்பாக மீட்க முடிந்துள்ளது.

அந்த நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட இந்திய மீனவர்களை நெடுந்தீவிற்குத் பாதுகாப்பாக அழைத்துச் சென்று, அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளையும் வழங்குவதற்கு கடற்படை நடவடிக்கை எடுத்தது. 

இதற்கமைய, ஆரம்ப விசாரணைகளில் வெளிவந்துள்ள தகவல்களின்படி, குறித்த இந்திய மீன்பிடிப் படகு சர்வதேச கடற்பரப்பு எல்லையை (International Maritime Boundary Line - IMBL) மீறி, இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதியின்றி நுழைந்து அடிப்பகுதி மீன்பிடியில் Bottom Trawlin சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பாறையில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் மீட்கப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கை கடற்படையானது, கடலில் உயிர்களைப் பாதுகாப்பது தொடர்பான சர்வதேசப் பொறுப்புகள் மற்றும் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் (Search and Rescue - SAR) பொறுப்புகளுக்கு இணங்க, கடலில் விபத்துகளுக்குள்ளாகும் நபர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதுடன், இந்த நடவடிக்கையானது அந்த அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகக் கருதப்படுகின்றது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال