JobVibe.lk - Sri Lanka Job Portal

கடற்படையின் துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் அட்மிரல் புத்திக லியனகமகே நியமிக்கப்பட்டார்

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையின் துணைத்  தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே 2026 ஜூலை 01 ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டதுடன், இதற்கான நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ புதன்கிழமை (2026 ஜூலை 08) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து, ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் புகழ்பெற்ற பழைய மாணவரான ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, 1992 ஆம் ஆண்டில் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 10 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த அதிகாரி பயிலுநராக இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவில் இணைந்து கொண்டார். 1994 ல் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, தற்காலிக செகண்ட் லெப்டினன்டாகப் பதவியேற்ற அவர், 1999 ல் கடற்படை மற்றும் கடலியல் அகாடமியில் செகண்ட் லெப்டினன்ட் தொழில்நுட்பப் படிப்பையும், 2002 ல் இந்தியக் கடற்படையில் சிக்னல்ஸ் ஸ்பெஷலிஸ்ட் படிப்பையும் வெற்றிகரமாக முடித்தார். மேலும், அவர் சீனாவின் கடற்படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் கட்டளை மற்றும் பணியாளர் படிப்பையும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு அகாடமியில் தேசிய பாதுகாப்பு மற்றும் உத்திசார் ஆய்வுகள் படிப்பையும், அமெரிக்காவின் மான்டேரி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு அறிவியலில் முதுகலை அறிவியல் பட்டத்தையும், தேசிய பாதுகாப்பு மற்றும் உத்திசார் ஆய்வுகளில் முதுகலை தத்துவப் பட்டத்தையும் முடித்து, ஜனவரி 2024 ல் ரியர் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். 

இலங்கைக் கடற்படையில் தனது சேவைக்காலத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, அதிவேகத் தாக்குதல் ரோந்துக் கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் மற்றும் ஸ்தாபனங்களின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். மேலும், கடற்படை மற்றும் கடல்சார் அகாதமியின் தளபதி, கடற்படை நடவடிக்கைகளின் பணிப்பாளர், பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் மற்றும் நடவடிக்கைகளின் பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளை வகித்துள்ள ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, இலங்கைக் கடற்படையின் ஒரு புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியாவார். இவர் தற்போது வடக்குக் கடற்படைக் கட்டளையின் புதிய பிரதித் தளபதியாகவும் பொறுப்புத் தளபதியாகவும் பணியாற்றுகிறார்.

மேலும், ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தனது பயிற்சிக் காலத்தில் ஜெனரல் சர் ஜான் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக ரக்பி அணியை வழிநடத்தியதோடு, தற்போது இலங்கை கடற்படை ரக்பி சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். 

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாகத் தீவிரமாகப் பங்கேற்று, எதிரிக்கு எதிராகக் காட்டிய வீரத்திற்காக ரண விக்ரம பதக்கம் மற்றும் ரணசூர பதக்கம் பெற்ற ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவுக்கு, அவரது மதிப்புமிக்க சேவை, களங்கமற்ற நன்னடத்தை மற்றும் கடமையுணர்வுக்காக உத்தம சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவரது சேவைகளைப் பாராட்டி, கடற்படைத் தளபதிகளால் எட்டு முறை பாராட்டுக் கடிதங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال