JobVibe.lk - Sri Lanka Job Portal

டெங்கு நுளம்புளை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய திட்டத்திற்கு கடற்படையினரின் பங்களிப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

டெங்கு ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டத் தொடரை புதன்கிழமை (2026 ஜூலை 08) வெற்றிகரமாக 4ஆவது நாளாகவும் முன்னெடுப்பதற்காக கடற்படையினர் தங்களது தீவிர பங்களிப்பை வழங்கியுள்ளனர். "டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி" (Towards a Dengue-Free Colombo) எனும் தொனிப்பொருளின் கீழ், ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியன இணைந்து இந்த தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

சுகாதார மருத்துவ அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினர்களுடன் இணைந்து, மேற்கு கடற்படைக் கட்டளையகத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் (50) அதிகமான கடற்படைப் வீரர்கள் இந்த தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்காக பெருமளவிலான மக்கள் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர். அதற்கமைய, சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கு சூழல், இராஜகிரிய, மஹர, வத்தள, கோட்டை, வெலிசறை, பொரள்ளை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களில் ஐம்பது (50) இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அங்கு ஆயிரத்து எழுநூற்று முப்பது (1,730) டெங்கு நுளம்புகள் போஷிக்கும் (பெருகும்) இடங்கள் கண்டறியப்பட்டன. மேலும், இந்த பரந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் டெங்கு ஒழிப்பு செயல்முறை குறித்த நூற்றறுபது (160) விழிப்புணர்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 

மேலும், இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களின் ஊடாக சுற்றுச்சூழல் முறையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை சுத்தம் செய்யும் மற்றும் அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு இணையாக, இலங்கை கடற்படையின் ஏனைய கட்டளைப்பிரிவுகளின் மூலமும் கடற்படை முகாம்களை டெங்கு நுளம்புகள் அற்ற பாதுகாப்பான வலயங்களாக மாற்றுவதற்காக தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மேலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال