எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில், புத்தளம் லீக் இலவன் அணியும், சுப்பர் லீக்கில் அங்கம் வகிக்கும் வென்னப்புவ நியூ யங்ஸ் அணிகளுக்ககுமிடையிலான கண்காட்சி சினேகபூர்வமான காற்பந்தாட்ட போட்டி செவ்வாய்க்கிழமை (21) மாலை புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
வென்னப்புவ நியூ யங்ஸ் அணியில் வெளிநாட்டு வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் பரீட்சார்த்தமாக இந்த போட்டியில் வென்னப்புவ நியூ யங்ஸ் அணியினர் புத்தளம் லீக் அணியோடு போட்டியில் பங்கேற்றனர்.
இவ்வாறான தரமான போட்டிகள் மூலம் புத்தளம் மாநகர வீரர்களுக்கு அதிக அனுபவத்தையும், புத்தளம் உதைபந்தாட்டத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கும் வழி வகுத்திருக்கின்றன.
நடைபெற்ற இந்தப் போட்டியிலே வென்னப்புவ நியூ யங்ஸ் அணியினர் 02 : 00 என்ற கோல்களினால் வெற்றி பெற்றனர்.
குறித்த இந்தப் போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம்.ஜிப்ரி, ஏ.ஏ. கியாஸ், எம்.ஆர்.எம்.அம்ஜத் ஆகியோர் கடமையாற்றினார்.
போட்டியில் வெற்றி பெற்ற வென்னப்பு நியூ யங்ஸ் அணியினருக்கு புத்தளம் லீக் நிர்வாகத்தினரால் பரஸ்பர வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.







