JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கல்பிட்டி பிரதேச செயலக பிரிவில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட 07 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

தித்வா புயல் காரணமாக கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக சேதமடைந்த இரண்டு வீடுகளை முழுமையாக மீள கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (21) செவ்வாய்க்கிழமை தேத்தாப்பளை கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.

இதேவேளை புத்தளம் கரம்பை கிராம சேவையாளர் பிரிவிலும் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட 05 வீடுகளை 05 மில்லியன் ரூபாய் செலவில் முழுமையாக மீள கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் சம காலத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகள் யாவும்  புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவரும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஜே.எம்.பைசல் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் மதத்தலைவர்கள், கல்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் நிஷாந்த, பிரஜா சக்தியின் சமூக மேம்பாட்டு சபை தலைவர்களான தேத்தாப்பளை வேனார்ட், கரம்பை முஹம்மது நதீர், நாவக்காடு ஸ்டாலின் மற்றும் தேத்தாப்பளை கிராம அரச உத்தியோகத்தர்கள்,  தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்,  கிராம மக்கள் மற்றும் புயலினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பயனாளிகளிகள் கலந்து சிறப்பித்தார்கள்.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال