(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
பாதுகாப்பான, ஒழுங்குமுறையான மற்றும் சட்டபூர்வமான புலம்பெயர்வை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்க நிறுவனங்கள், இலங்கை புலம்பெயர்வோர் தகவல் மையம் (MIC Sri Lanka) மற்றும் ஊடகங்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை திங்கட்கிழமை (27) கொழும்பு Courtyard by Marriott ஹோட்டலில் நடைபெற்றது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர சூம்மூலம் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் எஸ்.எம்.எஸ்.டி. குணசிங்க, ICMPD பிரதிநிதிகள்Ms.Sonya Douglas - Counsellor, Irregular Migration New Zealand High Commision of Sri Lanka & Maldives, Golda Myra Roma - Senior Project Manager International Centre for Migration Policy Development (ICMPD) அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புலம்பெயர்வு தொடர்பான சரியான சொற்கள், மீள்வும் மீளிணைவும், ஒழுக்கநெறி சார்ந்த தொழிலாளர் ஆட்சேர்ப்பு, சட்டவிரோத புலம்பெயர்வின் அபாயங்கள், மோசடி ஆட்சேர்ப்பு, புலம்பெயர்வோர் கடத்தல் மற்றும் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஊடகவியலாளர்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினரிடையே மேம்படுத்துவது இந்தப் பட்டறையின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
மேலும், புலம்பெயர்வு தொடர்பான நியாயமான மற்றும் பொறுப்பான ஊடகச் செய்தியிடலை ஊக்குவிப்பதோடு, அரசாங்கம், ஊடகங்கள் மற்றும் MIC இலங்கை ஆகியவற்றுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பட்டறையில் உலகளாவிய தொழிலாளர் புலம்பெயர்வு போக்குகள், தேசிய புலம்பெயர்வு கொள்கைகள், ஊடக ஒழுக்கம், தீர்வு முகசெய்தியியல் (Solution Journalism), நிபுணர்களை அணுகும் நடைமுறைகள் மற்றும் குழு செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள், புலம்பெயர்வு தொடர்பான துல்லியமான, சமநிலையான மற்றும் பொறுப்பான செய்தியிடலின் அவசியம் குறித்து விரிவான பயிற்சியையும் வழிகாட்டல்களையும் பெற்ற்றமை குறிப்பிடத்தக்கது.





