(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
டித்வா புயல் காரணமாக புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடொன்றை முழுமையாக மீள கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு, வியாழக்கிழமை (16) மரைக்கார் வீதியில் உள்ள 617/C, சீமாவெலி கிராம சேவகர் பிரிவின் சீமாவெலி கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஜே எம் பைசல் மற்றும் புத்தளம் மாநகர சபையின் முதல்வர் ரின்ஷாட் அஹமடின் தலைமையில், பிரஜா சக்தியின் சமூக மேம்பாட்டு சபையின் (CDC) தலைவர் சர்ராஜ் லாபிர் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் புத்தளம் பிரதேச செயலாளர் திருமதி. விதானகே, புத்தளம் மாநகர சபை உறுப்பினர் சஹ்ரான், கிராம சேவகர் ஜனூஸ் கான்,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனூன் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், கிராம மக்கள் மற்றும் டித்வா புயலினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பயனாளிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





