JobVibe.lk - Sri Lanka Job Portal

பயிற்சி பெறும் கடற்படை வீரர்களுக்கான தங்குமிட மற்றும் நலன்புரி வசதிகள் விரிவாக்கம்

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

பயிற்சி பெறும் பயிற்சி கடற்படை வீரர்களின் தங்குமிட மற்றும் நலன்புரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தென் கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் நிபுண நிறுவனத்தில் புதிதாகக் கட்டப்பட்ட வீட்டுத் தொகுதி, தென் கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன தலைமையில் வியாழக்கிழமை (2026 ஜூலை 16) திறந்து வைக்கப்பட்டது. 

கடற்படையின் சிவில் பொறியியல், மின்சாரம் மற்றும் மின்னணுவியல், மற்றும் பொறியியல் பிரிவினரின் தொழில்நுட்ப, தொழிற்துறை மற்றும் மனித உழைப்புப் பங்களிப்புடன் புதிதாகக் கட்டப்பட்ட இந்த வீட்டுத் தொகுதியைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, இதற்காக அர்ப்பணிப்புடன் பங்களித்த அனைத்துக் கடற்படை வீரர்களையும் தென் கடற்படைக் கட்டளையின் தளபதி பாராட்டி கௌரவித்தார். 

இந்த புதிய வீட்டுத் தொகுதி, பயிற்சி கடற்படை வீரர்களுக்கு வசதியான, பாதுகாப்பான மற்றும் முறையான தங்குமிடச் சூழலை வழங்கும் நோக்கில் கட்டப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் நலன்புரி நிலையை உயர்த்துவதற்கு கணிசமான பங்களிப்பு கிடைக்கும். மேலும், கடற்படை வீரர்களின் நலன்புரியை மேம்படுத்துவதற்கும் உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் இலங்கை கடற்படை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் திட்டங்களின் மற்றொரு முக்கிய மைல்கல்லாக இந்தத் திட்டத்தைக் குறிப்பிடலாம். இவ்வைபவத்தில் தென் கடற்படைக் கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட கடற்படை வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال