JobVibe.lk - Sri Lanka Job Portal

கட்டுநேரி தெப்பன் பகுதியில் ரூ.11 மில்லியன் மதிப்புள்ள பீடி இலைகளை கைப்பற்றிய கடலோர காவல் திணைக்களம்

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட ரூ.11 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள பீடி இலைகள் அடங்கிய பெருந்தொகையை இலங்கை கடலோரக் காவல் திணைக்களம் (Sri Lanka Coast Guard) வியாழக்கிழமை (16) கைப்பற்றியுள்ளது 

கடலோரக் காவல் திணைக்களத்துக்கு கிடைத்த விசேட புலனாய்வு தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை,( 2026 ஜூலை 16), வென்னப்புவ அரச புலனாய்வு சேவை அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து, கட்டுநேரி தெப்பன் துறைமுகப் பகுதியை மையமாகக் கொண்டு மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 

இதன்போது, 41 மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 1,580 கிலோகிராம் (ஈர எடையுடன்) பீடி இலைகள், ஒரு சந்தேகநபர், இரண்டு டிங்கி படகுகள் மற்றும் பீடி இலைகளை எடுத்துச் செல்லத் தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு லொறி ஆகியவை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மொத்த மதிப்பு ரூ.11 மில்லியனுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், இரண்டு டிங்கி படகுகள் மற்றும் லொறி ஆகியவை மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக வென்னப்புவ கலால் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடலோரக் காவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال