JobVibe.lk - Sri Lanka Job Portal

கௌரவ சபாநாயகர் (மருத்துவ) ஜகத் விக்கிரமரத்னவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்த கடற்படை தளபதி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, செவ்வாய்க்கிழமை (2026 ஜூலை 07) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில், கௌரவ சபாநாயகர் (மருத்துவ) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்.

அதன்படி, இராணுவ மரபுகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் இலங்கை கடற்படையின் பங்களிப்பு உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் குறித்து, கடற்படைத் தளபதிக்கும் கௌரவ சபாநாயகர் அவர்களுக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.  

மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதிக்கும் கௌரவ சபாநாயகர் அவர்களுக்கும் இடையில் நினைவுப் பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال