JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற புதிய மாணவர் வரவேற்பு விழா.

எம்.யூ.எம்.சனூன்

புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் 2028 கலை மற்றும் வர்த்தகப் பிரிவில் இணைந்த புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு அண்மையில் (06) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்தர இறுதியாண்டு மாணவர்கள் கலந்து கொண்டு புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்றனர்.

அதிபர் புதிய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், கல்வியில் சிறந்து விளங்க அர்ப்பணிப்பு, ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

புதிய மாணவர்களின் உயர்தரக் கல்விப் பயணத்தின் ஆரம்ப நிகழ்வாக அமைந்த இந்த வரவேற்பு விழா, மாணவர்களிடையே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியதுடன், அவர்களின் எதிர்கால வெற்றிப் பயணத்திற்கு சிறந்த தொடக்கமாக அமைந்தது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال