JobVibe.lk - Sri Lanka Job Portal

சின்னப்பாடு கடற்கரையில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள் , ஷாம்பு உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றிய கடற்படை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து புத்தளம், சின்னப்பாடு கடற்கரைப் பகுதியில்  புதன்கிழமை (2026 ஜூலை 08)  மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட நுகர்வுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அதன்படி, வடமேற்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் தம்பபன்னி நிறுவனம் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் ஆகியன இணைந்து புத்தளம், சின்னப்பாடு கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த கடற்கரைப் பகுதியில் கொண்டு செல்வதற்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த 15 சந்தேகத்திற்கிடமான பொதிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதன்போது, அந்த பொதிகளுக்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டிருந்த சுமார் 143,600 மருந்து மாத்திரைகள், 22,064 ஷாம்பு பக்கெட்டுகள் மற்றும் 3,816 நுளம்பு விரட்டி பூச்சு திரவக் குழாய்கள் (Tubes) ஆகியன கைப்பற்றப்பட்டன.

கடற்படை நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நுகர்வுப் பொருட்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடப்பு பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال