JobVibe.lk - Sri Lanka Job Portal

மாதம்பை அல்-மிஸ்பாஹ்வின் ஆரம்பப்பிரிவு ஆளுமைகள். இளம் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன் 

மாதம்பை அல்-மிஸ்பாஹ் கண்டெடுத்த இளம் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் எஸ்.எல்.அன்வர் தலைமையில் அண்மையில் (07) பாடசாலையின் மைதானத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றன.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மாதம்பை பொலிஸ் பிரிவின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு பொறுப்பதிகாரியாக செயற்படும் மரீனா ஹசீம் கலந்து சிறப்பித்ததுடன், பாடசாலை அபிவிருத்தியில் முக்கிய பங்கெடுக்கும் பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், இக்ரா குழு உறுப்பினர்கள், பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் மெஸ்டா குழு உறுப்பினர்கள் உள்ளடங்களாக ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் இறுதியில் சத்திய பிரமாண உரை நிகழ்த்தப்பட்டதுடன் மாணவர்களின் ஆளுமை திறனை வளர்த்தல், கடமை உணர்வை உருவாக்குதல், சிறந்த முன்மாதிரியை வெளிப்படுத்தல் போன்ற புதிய சிந்தனையுடன் எதிர்காலத்தில் அல்-மிஸ்பாஹ்வின் புதியதொரு அத்தியாயத்தை தொடர இம்மாணவர்களின் பயணம் ஓர் முக்கிய மைக்கல்லாகும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாடசாலை அதிபர் எஸ்.எல்.அன்வர் தனதுரையில், தலைமைத்துவம் என்பது பிறப்பால் மட்டுமே வருவதல்ல, அது முறையான பயிற்சியாலும், சரியான வாய்ப்புக்களாலும் வளர்த்தெடுக்கப்படும் ஒரு கலையாகும் எனத்தெரிவித்தார்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال