JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி முன்னாள் ஆசிரியர் அஷ்ஷெய்க் சலாஹுதீன் நளீமி (ஓய்வு நிலை) அவர்கள் காலமானார்.

புத்தளம், வான்வீதி, ஹைறாத் பள்ளி மஹல்லாவில் வசித்து வந்தவரும், ஓய்வுபெற்ற ஆசிரியரும், சமூக சேவையாளருமான அஷ்ஷெய்க் சலாஹுதீன் (நளீமி) அவர்கள் நேற்று (10) காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார், மர்ஹூம்களான செய்யது இப்றாஹீம், குரைசா பீவி ஆகியோரின் அன்பு மகனும், மர்ஹூம்களான முஹம்மது லெப்பை, மஹ்பூபா ஆகியோரின் மருமகனும், மர்ஹூமா ஷாகிரா மற்றும் சும்ரத் ஆகியோரின் அன்புக்  கணவரும், ரிபாய், அன்வர் Bபாஸ், சமீனா, நிஹாரா ஆகியோரின் சகோதரரும், சகீப், சாபிக், சfப்ரத், சfப்னத், சிஹாரத், சஅத், சலா, சுக்ரி, சமா, சுfபா ஆகியோரின் அன்புத் தந்தையும், சிப்கா (பலகத்துறை), மின்ஹா, சப்வான், அஸ்கர், பர்ஹான், ஸஹ்ரா, ருக்சானா (கொழும்பு) ஆகியோரின் மாமனாரும், சாஹிரா, பல்கலைக் கழக விரிவுரையாளர் நாதிரா, நிலாம், fபிட்டிங் Bபாஸ் ஹசனூன், சம்சிரா, சம்சிக், கலைஞரும், அறிவிப்பாளருமான சலீம்கான் ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நல்லடக்கம் இன்ஷா அள்ளாஹ்! இன்று (11) சனிக்கிழமை ழுஹர் தொழுகையுடன் புத்தளம் பகாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இவ்வாசிரியருக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار

-தகவல்:

மகன் - சகீப்

-தகவல் உதவி:

ஊடகவியலாளர் எம்.யூ.எம். சனூன்





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال