JobVibe.lk - Sri Lanka Job Portal

உயர்தரப் பிரிவிற்கான புதிய மாணவர்களின் உள்ளீர்ப்பு மாதம்பை அல் மிஸ்பாஹ்வில் சிறப்பாக இடம்பெற்றது.

எம்.யூ.எம்.சனூன்

2028ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களை உள்ளீர்க்கும் நடவடிக்கைகள் கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைவாக கலை மற்றும் வர்த்தக பிரிவிற்கான மாணவர்களை உள்ளீர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் அண்மையில் (08) மாதம்பை அல் மிஸ்பாஹ்வில் இடம்பெற்றது.

உயர்தர மாணவர்களுக்கான இந்த  விஷேட வரவேற்பு  நிகழ்வுகளானது  பாடசாலை அதிபர் எஸ்.எல்.அன்வர் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,  மெஸ்டா குழு உறுப்பினர்கள், இக்ரா அமைப்பினர், பள்ளி நிர்வாக சபை தலைவர் உட்பட இன்னும் பல முக்கிய பிரமுகர்களுடன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வானது 2027 க.பொ.த. உயர்தர மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال