JobVibe.lk - Sri Lanka Job Portal

பொத்துவில் கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளான மீன்பிடி படகிலிருந்த மீனவர் ஒருவர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கைக்கு கிழக்கே சுமார் 15 கடல்மைல் தொலைவில் உள்ள பொத்துவிலிருந்தான கடற்பரப்பில், சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய உள்நாட்டு மீன்பிடி படகொன்றில் இருந்த மீனவர் (01) ஒருவர், கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக வெள்ளிக்கிழமை (2026 ஜூலை 17) கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு கிழக்கே பொத்துவிலில் கடலில் அனர்த்தத்திற்குள்ளான மீன்பிடி படகு தொடர்பாக கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால் வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, மிகவும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் (வெள்ளிக்கிழமை 2026 ஜூலை 17) இலங்கை கடற்படையின் 'விஜயபாகு' கப்பல் மற்றும் கடற்படைப் படகுகளைப் பயன்படுத்தி அந்த கடல் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் போதே பொத்துவிலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கியிருந்த இந்த மீனவர் மீன்பிடி படகில் இருந்து மீட்கப்பட்டார்.

அங்கு விபத்துக்குள்ளான மீனவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பின்னர், இலங்கை கடற்படைக் கப்பலான 'விஜயபாகு' மூலம் முதலுதவி வழங்கப்பட்டு, விரைவாக கரைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும், கொழும்பு கடற்படை பிரிவில் அமைந்துள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (MRCC) ஒருங்கிணைப்புடன், இலங்கைக்கு சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் சிக்கியிருக்கும் கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினரை மீட்பதற்காக உடனடி நடவடிக்கை எடுக்க இலங்கை கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال