எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மாநகர சபையின் டிஜிட்டல் கட்டண முறைமை வியாழக்கிழமை (16) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மதின் அழைப்பின் பேரில், வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, இப்புதிய டிஜிட்டல் கட்டண முறைமையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
பொது மக்களுக்கான மாநகர சபையின் சேவைகளை மேலும் இலகுவாகவும், விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் வழங்கும் நோக்கில் இம்முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.












