JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்டவருக்கு 5 மில்லியன் பெறுமதியான புதிய வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு...!.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

டித்வா புயல் காரணமாக கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக சேதமடைந்த  வீடொன்றை முழுமையாக மீள கட்டுவதற்கான  அடிக்கல் நடும் நிகழ்வு, வெள்ளிக்கிழமை  (17) கண்டக்குழி   கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.

இந்நிகழ்வு  புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஜே எம் பைசல் மற்றும் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸ்  தலைமையில், கண்டக்குழி வட்டார கற்பிட்டி  பிரதேச சபை உறுப்பினர் இபாம் மற்றும் நிசீக, பிரஜா சக்தியின் சமூக மேம்பாட்டு சபை - CDC  தலைவர் மிளிந்த  ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச செயலாளர் திருமதி. பிரியதர்ஷினி,  கண்டக்குழி கிராம அரச உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம் முஷாதீக் , கற்பிட்டி பிரதேச செயலகத்தின் அரச உத்தியோகத்தர்கள், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்,  கிராம மக்கள் மற்றும் புயலினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பயனாளிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال