(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையினர், சிலாபம் கருக்குப்பனைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (10) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படையினர்
வடமேற்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் 'தம்பபண்ணி' நிறுவனத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, சிலாபம் கருக்குப்பனைப் பகுதியில் வெள்ளிக்கிழமை (10) மேற்கொண்ட விசேட தேடுதல் ளநடவடிக்கையின் போது, புதர்க்காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பத்து (10) பொதிகள் சோதனையிடப்பட்டன. அதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் நானூற்று ஒரு (401) கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இந்த தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் மீட்கப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாபம் மதுவரி திணைக்கள அலுவலகத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

