(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையினர், கற்பிட்டி கீரிமுந்தல் கடற்கரைப் பகுதியில் வெள்ளிக்கிழமை (10) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற மருந்து மாத்திரைகளை கைப்பற்றிய கடற்படையினர்
வடமேற்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் 'விஜய' நிறுவனம் கற்பிட்டி கீரிமுந்தல் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் ளநடவடிக்கையின் போது, புதர்க்காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு (01) பொதியானது சோதனையிடப்பட்டது. அதன்போது, ளசட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் எழுபத்தோராயிரத்து தொள்ளாயிரத்து அறுபது (71,960) மருந்து மாத்திரைகளை கடற்படையினர் கண்டெடுத்துள்ளனர்.
இந்த தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் மீட்கப்பட்ட மருந்துப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

