JobVibe.lk - Sri Lanka Job Portal

மாதம்பை அல்-மிஸ்பாஹ்வின் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மூன்று வருடத்திற்குரிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்புத் தேர்ச்சியை வெளிப்படுத்திய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வானது பாடசாலை அதிபர் எஸ்.எல்.அன்வர் தலைமையில் அண்மையில் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக சிலாபக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜே.பி.சி.கெலும் ஜயலத் கலந்து சிறப்பித்ததுடன் மற்றும் பல பிரமுகர்களு கலந்து சிறப்பித்தனர்.

தரம் 05 புலமை பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்திய ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் முக்கிய நிகழ்வும் இடம்பெற்றன. 

அத்துடன் 2025ம் ஆண்டு தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் 70 வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் 2024, 2023 ம் வருடங்களில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال