(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில் புத்தளம் தம்போவ இராணுவ வீரர்களின் பங்குபற்றுதலுடன் கற்பிட்டி பொது சுகாதார பரிசோதகர் சப்ரின் மொஹமட் தலைமையில் செவ்வாய்க்கிழமை (07) கற்பிட்டி நகரில் உள்ள மத ஸ்தானங்கள் மற்றும் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இடம்பெற்றது.
கற்பிட்டி நகரில் உள்ள பௌத்த விகாரை , முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் என்பவற்றிலும் முஸ்லிம் மற்றும் சிங்கள பாடசாலைகளிலும் சுத்தம் சுகாதாரமான சூழலை ஏற்படுத்தும் நோக்கோடு நுளம்பு பெருகும் இடங்கள் இனம் காணப்பட்டு கிளீன் சிறி லங்கா வேலைத்திட்டம் ஊடாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.இவ் வேத்திட்டத்தில் கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் அதிகாரிகள் மற்றும் புத்தளம் தம்போவ இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








