(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள், இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க திங்கட்கிழமை (2026 ஜூலை 06) விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
இராணுவ மரபுகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக விமானப்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த கடற்படைத் தளபதிக்கு, விமானப்படையின் இராணுவ மரபுகள் மற்றும் கௌரவத்தை பறைசாற்றும் வகையில், சம்பிரதாயபூர்வமான அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய கௌரவமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, கடற்படைத் தளபதியும் விமானப்படைத் தளபதியும் இருதரப்பு ரீதியாக முக்கியமான மூலோபாய விடயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். மேலும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை வழங்கும் முக்கிய பங்களிப்பு குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், முப்படைகளுக்கு இடையே நிலவும் நெருக்கமான உறவுகளையும், சேவைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.








