(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அதிபர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு அல் அக்ஸா தேசிய பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர் எம் பீ எம் ரோஸ் புஹாரியின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (04) கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் அதன் அதிபர் எஸ் எம் அரூஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையாக 1999 ம் ஆண்டு தரமுயர்ந்த காலப்பகுதியில் கடமையாற்றியவர்கள் என்பதும் சிறப்பம்சமாகும். ஆசிரியர்கள் அதிபர்கள் என சுமார் 30 பேர் கலந்து கொண்டு தமது பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் காலங்களில் இடம்பெற்ற சுவாரஸ்யமான மறக்க முடியாத நினைவுகள் மீட்டப்பட்டதுடன் தம்மோடு ஆசிரியர் மற்றும் அதிபர் பணி செய்து மரணித்தவர்களின் பெயர்களை ஞாபக மூட்டி அவர்களுக்கான துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இறுதியாக இந்த ஒன்றுகூடல் நிகழ்வை நினைவு கூறும் வண்ணம் மாவட்ட சுற்றாடல் முன்னோடிக் குழுத் தலைவர் எம் சாபியினால் தில்லையூர் பாடசாலையின் அதிபர் எஸ் எம் அரூஸிடம் மரக் கன்று வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.





