முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான பொத்துவில் மீராசாஹிபு அப்துல் மஜீட் (SSP) அவர்கள் காலமான செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையும் வேதனையும் அடைந்தேன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார், தனது வாழ்நாள் முழுவதும் அரசியல் துறையிலும், பொலிஸ் சேவையிலும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் மக்களுக்காகப் பணியாற்றிய சிறந்த தலைவராகத் திகழ்ந்தார். அவர் ஆற்றிய சேவைகள் மக்களின் மனங்களில் என்றும் அழியாத நினைவாக நிலைத்திருக்கும்.
குறிப்பாக, 1990 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் பயங்கரவாத வன்முறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட அந்த துயரமான காலகட்டத்தில், மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் வாழ்வாதாரத்திற்காக அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளும் உதவிகளும் எமது சமூகத்தால் என்றும் நன்றியுடனும் மரியாதையுடனும் நினைவுகூரப்படும். சமூகப் பொறுப்புணர்வுடனும், மனிதாபிமானக் கண்ணோட்டத்துடனும் அவர் ஆற்றிய சேவைகளை எவராலும் எளிதில் மறந்துவிட முடியாது.
அன்னாரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், அவரை நேசித்த அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அல்லாஹ் (ஸுப்ஹானஹு வ தஆலா) அன்னாரின் எல்லா நற்செயல்களையும் பொருந்திக் கொண்டு, அவரின் பாவங்களை மன்னித்து, கப்ரை விசாலமாக்கி, உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவர்க்கத்தை அருள்புரிவானாக.
மேலும், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இந்த பேரிழப்பைத் தாங்கும் மனப்பக்குவத்தையும் அழகிய பொறுமையையும் வழங்குவானாக.
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
-- கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் (பாராளுமன்ற உறுப்பினர்)
